http://www.dinamalar.com/news_detail.asp?id=674247
இந்த முட்டாக்களின் செயல்களை யாரும் கவனிப்பதே இல்லையா ?
நூறு நாள் திட்டம் என்று எல்லாரையும் யும் முடக்கி வீட்டில் அமுக்கி டாஸ்மாக் வழி சென்று விட்டது சமூகம்.
ஏற்கனவே சாகுபடிக்கு நிலம் இல்லை இருக்கிற கோமண நிலத்திலும் பண்ணை குட்டை அமைக்க போகிறார்களாம்.
ஊர்க்குளங்கள் ஏரி கால்வாய் நீர் தேங்கும் இடங்களில் எல்லாம் சாக்கடை ஆக்கிவிட்டு இவர்களுக்கு வெட்கமாய் இல்லை ?
--
சோமங்கலம் சிவன் கோவில் சென்ற வழியில் ஒரு கிராம விவசாயியை பஸ் பயணத்தில் சந்தித்தேன் எப்படி இருக்கிறது என்று தான் கேட்டேன் (அவ்ளவுதான் மனசு கெட்டது !)
களை கொத்து யாரும் 400 ரூபாய்க்கு குறைவாய் வருவதில்லையாம் அதும் சாப்பாடு டீ கண்டிப்பாய் வாங்கி கொடுக்க வேண்டுமாம் அதுவும் அலுவலகம் போல் ஆறு மணிக்கெல்லாம் போயி விடுகிறார்களாம். மொத்தம் 500 ரூபாய் ஆகிறது, இவர் வருமானம் அவ்வளவு இல்லையாம் புரோக்கர் போக கிடைப்பது மிகவும் கையை கடிக்கிறது என்றார்.
நேரடியாக சில இடங்களுக்கு விற்கவேண்டியதுதானே என்றால் புன்னகைக்கிறார். வலியும் வேதனையும் பின்னால் தெரிந்தது.
வெயில் வேறு அதிகம் என்பதால் இந்த வேலைக்கு யாரும் எளிதாக வருவது இல்லை, எல்லா ஏரி களிலும் தண்ணீர் இல்லை என்பதால் பக்கத்து நிலங்கள் பிளாட்கள் ஆக விற்கபடுகின்றன என்றார் அது மட்டும் இல்லாமல் தண்ணீர் வந்தாலும் இவர் நிலத்துக்கு வராதாம் வரும் கால்வாய் எல்லாம் லெ அவுட் க்கு போக வழிகளா மாற்ற படுகின்றன.
மல்லிகை தவிர ஏதும் கட்டுபடி ஆவதில்லை என்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் விற்று விட்டு போயிடுவேன் என்கிறார். விற்றால் நாலு மடங்கு வருமானம் வருமாம். ஊர் பஞ்சாயத்து போன்ற வகையாராக்களை கவனித்து கொண்டால் சிலவு குறையும் சி எம் டி எ என்றால் செலவு அதிகமாகிறது என்றார்.
கண்ணை வித்து சித்திரம் வாங்க முடியுமோ ? அந்த முக்கண்ணன் சிவன் தான் சொல்லணும் .
Monday, 25 March 2013
Wednesday, 20 March 2013
விவசாயம் - அடிப்படை
1.
நிலம் அல்லது மண் தொட்டிகள் சேகரிப்பது
(நிலம் வாங்குவது தனிபெரும் வேலை)
a.
மண் பரிசோதனை (கார மண் / அமில மண்) செய்தல்
b.
தகுந்த பயிர் வகை சீதோஷண நிலை/பயனர் கொண்டு முடிவெடுத்தல்
c.
விதை நாத்து மற்றும் போத்து முறைகள்
2.
நீர் வசதி (தமிழகத்தை பொறுத்தவரை நிலத்தடி/
ஆற்று நீர் கிடைத்தாலும் தேக்கி ஸ்ப்ரிங்க்லெர்
போன்ற நீர்தெளிப்பான் வசதி செய்து கொள்ளுங்கள் )
3.
மூடாக்கு போட தழைகள் (வேர்ப்பகுதி ஈரப்பதம்
தேக்கி வைத்தலுக்காக/ அதற்கான செடிகள் மரங்கள் வளர்த்தல் )
4.
மாட்டு சாணம் / மண்புழு உரம் / தழை மற்றும்
பல்வேறு (மனித, விலங்கு) கழிவுகள் மக்கிய உரம் தயாரிக்க
தொட்டி / மண்பாண்டம் / சமயலறை கழிவு நீரும் உரம் தான்.
5.
மண் மேடு தயாரித்தல், உரக்குழி, பண்ணைகுட்டை (நீர் மேலாண்மை)
6.
இடர்பாடு சந்திக்கும் வழிமுறை – பூச்சி, மண் ஊக்கம், காற்று தடுப்பான் செடிகள், வெள்ள நீர் வழிந்தோடும் வழிகள், கூண்டு போன்ற இதர பொறி
கருவிகள் (மகரந்த சேர்க்கை, இயற்கை சமன்பாடு)
வேளாண்மை தொடர்பான விழிப்புணர்வு
– இந்திய பாரம்பரிய நெல் வகைகள்
மற்ற துறைகளில் இருந்து வேளாண்மைக்கு, குழு விவாதம்
http://www.tamilpaper.net/?p=525 விதைகள் தாவரங்கள் மற்றும் அது தொடர்பான இந்தியாவின் ஏமாளியான நிலை
விவசாயம் - தெரிந்து கொள்ளவேண்டிய தளங்கள்
பிரபலமில்லா தளங்கள் புத்தகங்கள் நபர்கள்
restore.org.in – பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான பொருட்கள்
விற்பனை குழு மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்பான தகவல்
- பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான குழுமம்
மற்றும் விளம்பரங்கள், கட்டண சேவை
http://earth.org.in
– நித்யா பார்ம் என்று தனி ஒருவரின் முழுமுதல்
பரிசோதனை முயற்சி பாடங்கள் (சுயசார்பு, துறை மாற்றி
சாதித்த அனுபவங்கள்)
http://csm-fanaa.blogspot.com/ மாற்று விவசாயம் பரிசோதனை
மற்றும் சுய சார்பு முன்னோடிகள் (துறை மாற்றி சாதித்த அனுபவங்கள்)
hindu.com/2010/01/31/stories/2010013158140200.htm - விவசாயமும் ஒரு அறிவியலே
- முன்னோடிகள் (துறை மாற்றி சாதித்த அனுபவங்கள்)
விவசாயம் - ஆர்வலர்களுக்கு வணக்கம்
பாரதத்தின் ஆன்மா கிராமங்கள் - விவசாயம் அதை
உணர்பவர்களுக்கு !
அன்பர்களே வணக்கம்
நம் பாரத தேசத்தில் விவசாயம் என்பது கானல்
நீராய் மாறி சோத்துக்கு கையேந்தும் நிலை வரப்போகிறது.
நம்மில் பலர் விவசாயம் என்பதை பற்றி ஆர்வம்
இருப்பினும் எங்கு தொடங்குவது என்றே நினைப்பில் பல காலம் சென்று விடுவதை அறிவோம்; சான்றோர் வாக்குப்படி எதுவும் இளமையில் பயிலப்படவேண்டும்.
இளையர்கள்
திருமணத்திற்கு முன் எதுவாகிலும் முயற்சி செய்துவிடவேண்டும் அதுவே எளிதானது.
இப்போது பரவலாக எல்லாரும் விவசாயம் பற்றியும்
அதை எப்படி எல்லாம் செய்ய முடியும் என்பதையும் பல ஊடகங்களில் காண்கிறோம்.
இங்கு பகிர வேண்டிய தகவல்கள் எல்லாம் மற்ற
துறை நண்பர்களுக்காகவே இதை நான் ஒரு நிபுணனாக செய்யவில்லை என்பதை மனதில் கொள்ளவும்; நானும் உங்கள் போல் ஒரு சக பயணி வாருங்கள் சேர்ந்து தேடுவோம்;
தேடிக்கண்டடைவோம்.
சில முன் குறிப்புகள் :
1. முதலில் ஒன்றை தெளிவாய் கொள்ளுங்கள் நீங்கள்
துறை மாற்றி வருவதானால் அதற்கு உரிய காலமும் உழைப்பும் நேர்மையான திடமனதும் தேவை.
2. நீங்கள் உள்ளே வரும் துறை தினமும் இயற்கையாகவே
மாறிக்கொண்டே இருப்பது.
3. அந்த மாற்றங்களை புரிந்து அதை கற்க பொறுமை
அவசியம்
4. மற்ற எல்லா தொழிலை போன்று இதை கற்று உடனடியாக
பலன் பார்க்க முடியாது (இயற்கை ஆசீர்வதித்தால் ஒழிய)
5. உங்கள் தற்போதைய தொழில் / வேலையை எக்காரணம்
கொண்டும் விடாதீர்கள்; கூடுதல் உழைப்பை கொடுக்க
தயாராகுங்கள்
6. விவசாயம் என்பதை எந்த வடிவிலும் தொடங்கலாம்
வீட்டு தோட்டம் , தோப்பு மற்றும் பண்ணை, பயிர் வளர்ப்பு, காடு வளர்ப்பு, மதிப்பு கூட்டுதல் மற்றும் விலங்குகள்
வளர்ப்பு.
Subscribe to:
Posts (Atom)