Tuesday 21 May 2013

மண்ணை உணருதல்

கோடை முடிகிறது, பள்ளி திறக்கும், குழந்தைகள் தயங்கித்தயங்கி  வெட்ட கொண்டு செல்லப்படும் ஆடு  போல் மாலை போல் பேக் மாட்டிக்கொண்டு சீவி சிங்காரிச்சு இழுத்து செல்லப்படுவார்கள்.

உங்களில் கீழ்க்கண்டவர்கள் இருக்கிறீர்களா சில கேள்விகள் ..

1. எனக்கு மரங்கள்/ விலங்குகள் என்றால் ரொம்ப ஆர்வம் அதிக தடவை தடவை வாலன்டியர்  புரோகிராமில் கலந்து கொண்டு மரம் நாட்டிருக்கேன் எதிர்காலத்தில் விவசாயம் செய்யணும்கறது என் கனவு
2. என்னால் சமூக சேவையெல்லாம் செய்ய முடியாது நான் ஆபிஸ்ல அவுட் ரீச் பிரோக்ரம்ல அப்பப்ப பள்ளிகளுக்கு அனாதை ஆசிரமங்களுக்கு உதவ செல்வேன்
3. நான் உண்டு என் வேலை உண்டு அதை சரியா செய்வதே சமூகத்திற்கு நான் செய்யும் நன்மை.

எப்பவாது யோசிச்சீங்களா நீங்க எவ்வளவு படிச்சிருந்தாலும் கூலி வேலை தான் செய்யறீங்கண்ணு?
நீங்கள் காலையில் அடிச்சி புடிச்சு ஆபீஸ் போயி வேலைக்கு முன்னாடி மூஞ்சி கழுவரது தான் மொதல்ல செய்ரவேலை, ஏன்னா டிராபிக் புழுதி கசகசப்பு..வெய்யில்.

வெள்ளைக்காரன் ஒரு காலத்தில சொன்னாண்கிறதுக்காக மிசினாறி காண்வெண்ட்.கள் ஆரம்பித்து வைத்தது இது. இன்னும்   பிஞ்சு குழந்தைகளை  காலில் உறைய மாட்டி ரத்தத்தை உறைய வைக்கும் சூ மாட்டி அனுப்புறீங்களே இது சரியா? ஒரு தடவையாச்சும் பள்ளி கூடத்தில கேட்டீங்களா  ஏன் இப்படி 40 டிகிரி வெயிலில் இப்படி மாட்டி வரணும்னு ? ஏன் அவங்க டிராபிக்லா போகலையா அவங்களுக்கு ஏ சி ஸ்கூல்ஆ ? அவங்களுக்கு கச கசப்பு வராதா ? காலில் அரிக்காதா ? ஏன் பள்ளி கூடத்தில் எப்போதும் விளையாட்டு பீர்யடு மட்டும் தான் மொத்த நாளுக்குமா ? சூ மாட்டி தோம் தொம்நு குதிப்பாங்களா ? எல்லாருக்கும் மாட்டு தோலில்  சூ செய்யணும்னா எத்தனை மாடு வெட்ட பட்டிருக்கும்?



வெள்ளைக்காரனுக்கு அவன் ஊரில் பெரும்பாலும்  பனி மட்டும் தான் இருக்கும்; நமக்கு புத்தி எங்க போவூது ?
அவன் இந்த ஊருக்கு வந்தாண்ணா கவனிச்சிருக்கலாம் காட்டன் ஷர்ட்டும் டவுசரும் மாட்டிக்கிட்டு தான் சுத்துவான்.  நாம குழாய் மாட்டிக்கிட்டு சொறிஞ்சிக்கிட்டு இருப்போம் நல்ல வெயிலிலும்.



Saturday 11 May 2013

விவசாயம் பொய்த்து விட்டது

"நமக்கு தெரிந்ததெல்லாம் விவசாயம் பொய்த்து விட்டது நீரில்லாமல்" இது முழுக்க முழுக்க தவறு. முக்கியமான கவனிக்க மறுக்கிற பல விஷயங்கள் இருக்கின்றன.


சோழர்காலத்தில் இருந்து ஏரிகளும் குளங்களும் நிறையவே இருந்திருக்கின்றன நம் அலட்சிய மனோபாவம்; ஒருங்கிணைந்து செயல் படாமைதான் இந்த தற்போதைய நிலைமைக்கு நாம் காரணமாய் சொல்ல முடியும்.


தற்பொழுது அதற்கு அவசியம் ஏற்பட்டு இருக்கிறது அரசும் விழித்து கொண்டிருக்கிறது உலக வங்கி உதவியுடன் செயல் பட்டு வரும் நீர் ஆதாரம் காக்கும் மராமத்துபணிகள் சரியாக செய்யப்படவில்லை எனில் அதை உங்களால் உங்கள் பகுதியில் கண்காணிக்க முடியவில்லை  என்றால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று கூறி வருவது ஐ டி படித்து அமெரிக்க மோகத்தில் திளைக்கும் அன்பர்கள் ஒட்டு போடாமைக்கு இணையானது (அவர்கள் போய் விட்டு வந்து இறங்கி செய்யும் அளப்பறை பற்றி பலர் எழுதியதையும் நினைவு கூர்வோம்)

என்ன செய்யலாம்.

1. பலர் தங்கள் பரிசோதனை முயற்சிகளை ஊடகத்தில் பதிவு செய்கிறார்கள் அதை முறைமை படுத்த வேண்டும்.  விவசாய பல்கலைகழங்களை நம்பி எந்த பலனும் இல்லை அதிலும் சரியான தகவல்களை பெறுவதை எளிதாக வேண்டும்.

2. நீர் குறைத்து / குறைந்து பெரும் காலத்தில் எந்த பயிர், தாவரம் எந்த மண் வளத்தில் எந்த நீர் அளவில் சரியாக வளரும் என்ற தகவல் பட்டியல் அதிகம் எல்லாருக்கும் சென்றதாக தெரியவில்லை. காரணிகளை பதிவு செய்ய ஆரம்பித்து விட்டோமானால் குழு முயற்சியால் அதை தகவமைக்கலாம்

3. அதே போல் அறுவடையான பயிர் பொருட்கள் நேரடியாக அந்த பகுதி குடும்பங்களுக்கு கிடைக்குமானால் (பெட்ரோல், இன்ன இதர செலவினங்கள் குறையும்,  கமிசன் என்ற பெயரில் சொரண்டும் ஊழல் வாய்ப்பு அடைபடும்)

4. இவை போன்று தகவமைக்கும் முறை ஏற்கனவே இருக்க கூடும் அவை நிறுவனங்களாக செயல்படும் விவசாய பண்ணையார்களுக்கே     அதிகம் உபயோகபடுமாறு இருக்கும் அதை மொழிபெயர்க்க ஒரு ப்ரோக்கர் வருவார் மீண்டும் எல்லாம் பழைய நிலைக்கே செல்லும். அவ்வாறு இல்லாமல் சாதாரண மனிதருக்கு புரியக்கூடிய   மொழி நடையிலும் கட்டுரை போன்று இல்லாமல் கணிமை முறையில் விவரங்கள் தரப்படுமானால் இவை இதன் பலனை பரந்த அளவில் கொடுக்கும்.

5. பிறகு தொடு திரை கணினி மூலம் இந்த தகவல்களை பெறுவதும் செலுத்துவதும் எளிது.

6. எல்லாருக்கும் அடிப்படை கணினி அறிவு பெற்ற குடும்பத்தினர் இருப்பார்கள் அவர்கள் முதலில் ஒரு சோசியல் ப்ரொபைல் முகவரி indiblogger போன்ற இடங்களில் பெறுவதும் சிலந்தி வலைப்பின்னல் போன்று தொடர்பு பெறுவதும் முதல் அடிப்படை செயல்.


 focus groups - என்று கீழ்கண்டவாறு உருவாக்கினால் நாம் அதை முன்னிலை படுத்த தொகுக்க உதவியாக இருக்கும்.


1. குறைந்த  நீர் செலவில் பயிர்கள் பற்றி விரிவாக தொகுக்க

2. வறட்சியான இடத்தில் விவசாயம் செய்ய மானாவாரி தாவரங்கள், மரங்கள்

3. காடு வளர்ப்பு, சமையலறை தோட்டம் (பிளாட் வாசிகள் கூட இப்போது கலக்குகிறார்கள்) (ஒன்றுமே செய்ய முடியாதவர்கள் கூட செய்ய கூடிய விஷயம்)

4. மாவட்ட அளவில் சில நோய் காரணிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் சரி செய்ய மூலிகைகள் வளர்ப்பு

5. கருவிகள் ஈடுபடுத்துதல்

6. அருகே நிலத்தை தரிசாய் போட்டு வைத்துள்ளவர்கள் வசம் தகவல்கள் கொண்டு சேர்த்தல் (ஏனெனில் உங்கள் அருகே மர வளம் இல்லாமல் தனியாக மழை பெறுதல் இயலாது )

 [கல்வி நிறுவனங்கள் அரசு கல்லூரிகள் கோவில்கள், இவைகளுக்கு அருகாமை நிலங்கள் வெட்டியாகவே இருக்கும் அதை அந்த அந்த பகுதி மக்கள் உபயோகிப்பவர் கொண்டு சிறு சிறு தோட்டங்களை அமைக்கலாம். அதில் வரும் பழங்கள் காய்கறிகள் அங்கேயே முயற்சியில் ஈடுபடும் அல்லது தொண்டுள்ளம் கொண்ட உபயோகிப்பவருக்கு கிடைக்குமாறு செய்யலாம்.]

7. விழிப்புணர்வு தகவல்கள் - எத்தனை பேருக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவிகித அரசு மானியம் கிடைக்கும் என்பது தெரியும். இதை எல்லாம் கேட்டு பெறுவதற்கு தயக்கம் இருக்கவே கூடாது. எல்லாம் நம் வரிப்பணம் தான். சிறு விவசாயிகளுக்கு இதை பெறுவதில் உள்ள சிரமங்களையும் இத்தகைய குழுக்கள் எளிதாக தீர்க்கலாம்  (http://www.aed.tn.gov.in/worldbank_aided_Agri_modernisation.html )

பயிர் பற்றி கணிமை முறையில் தகவமைக்க பல வழிகள் இருக்கிறது.

பத்மநாபன் கணேசன் என்ற தனி நபர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளார் - http://agricultureforeverybody.blogspot.com/


ICAAP  என்ற ஒரு முயற்சி இத்தகைய தகவல்களை தொகுத்து வருகிறது - http://www.advanceagriculturalpractice.in/w/index.php/Main_Page
--
எப்படி தொகுக்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம்
http://mooligaivazam-kuppusamy.blogspot.in/  மூலிகை தாவரங்கள் பற்றிய தொகுப்பு.
மற்றும்   http://www.grannytherapy.com/tam/

எப்படி இருக்க கூடாது என்பதற்கு காசுக்கு வேலைபார்க்கும் அடிமைகள் இருக்கும் ஆங்கில பயொலாஜிகல் பெயர்கள் உள்ள தளம் http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_cropselect_ta.html

---
வேறு சில வேளாண் பற்றிய அறிமுகங்கள் :

காடு வளர்ப்பு பற்றிய அனுபவ அறிவு பெற்ற குழு - afforestt.com 100 sqft இடங்களில் கூட 3000% சதவிகித பலன்களை பெறக்கூடிய மரங்களை இயற்கை முறையில் வளர்த்து தருகிறார்கள்  (பின்புலம் ஜப்பான்,  டாக்டர் அகிரா மியவகி முறைமை)


நம்பகுதியில் போத்துமுறையில் மரங்களை உருவாக்கும் அர்ஜுனன்
http://www.chepparaivalaboomigreenworld.com/index.html

சமையலறை தோட்டம் போல் கண்டெய்னர் தோட்டம் http://pakagri.blogspot.in/2013/01/how-to-grow-your-food-container.html 
(மற்றும் ஏராளமான அப்டுடேட் தகவல்கள்)


சாப்ட்வேர் துறையில் இருந்து வேளாண்மைக்கு மாறியவர்கள் 

http://www.rameshwari.com/
http://techie2aggie.blogspot.in/ (
மற்றுமொரு அன்பரின் சவேரா பார்ம்ஸ் மிகவும் அப்டேடாக இருக்கிறது)
குரல் வழி தானியங்கி முறை விவசாய தகவல் பெறும் கருவி IIT ஒருங்கிணைப்பில் முன்னோட்டத்தில் இருக்கிறது http://asrmandi.wix.com/asrmandi

மரங்களை பற்றிய இன்றிமையாமை குறித்து ஒரு கட்டுரை 
http://solvanam.com/?p=24498


மீண்டும் தொடர்வோம் ...