Wednesday 20 March 2013

விவசாயம் - ஆர்வலர்களுக்கு வணக்கம்



பாரதத்தின் ஆன்மா கிராமங்கள் - விவசாயம் அதை உணர்பவர்களுக்கு !

அன்பர்களே வணக்கம் 


நம் பாரத தேசத்தில் விவசாயம் என்பது கானல் நீராய் மாறி சோத்துக்கு கையேந்தும் நிலை வரப்போகிறது.
நம்மில் பலர் விவசாயம் என்பதை பற்றி ஆர்வம் இருப்பினும் எங்கு தொடங்குவது என்றே நினைப்பில் பல காலம் சென்று விடுவதை அறிவோம்; சான்றோர் வாக்குப்படி எதுவும் இளமையில் பயிலப்படவேண்டும். 

இளையர்கள் திருமணத்திற்கு முன் எதுவாகிலும் முயற்சி செய்துவிடவேண்டும் அதுவே எளிதானது.
இப்போது பரவலாக எல்லாரும் விவசாயம் பற்றியும் அதை எப்படி எல்லாம் செய்ய முடியும் என்பதையும் பல ஊடகங்களில் காண்கிறோம்.


இங்கு பகிர வேண்டிய தகவல்கள் எல்லாம் மற்ற துறை நண்பர்களுக்காகவே இதை நான் ஒரு நிபுணனாக செய்யவில்லை என்பதை மனதில் கொள்ளவும்; நானும் உங்கள் போல் ஒரு சக பயணி வாருங்கள் சேர்ந்து தேடுவோம்; தேடிக்கண்டடைவோம்.


சில முன் குறிப்புகள் :


1. முதலில் ஒன்றை தெளிவாய் கொள்ளுங்கள் நீங்கள் துறை மாற்றி வருவதானால் அதற்கு உரிய காலமும் உழைப்பும் நேர்மையான திடமனதும் தேவை.

2. நீங்கள் உள்ளே வரும் துறை தினமும் இயற்கையாகவே மாறிக்கொண்டே இருப்பது.

3. அந்த மாற்றங்களை புரிந்து அதை கற்க பொறுமை அவசியம் 

4. மற்ற எல்லா தொழிலை போன்று இதை கற்று உடனடியாக பலன் பார்க்க முடியாது (இயற்கை ஆசீர்வதித்தால் ஒழிய)

5. உங்கள் தற்போதைய தொழில் / வேலையை எக்காரணம் கொண்டும் விடாதீர்கள்; கூடுதல் உழைப்பை கொடுக்க தயாராகுங்கள் 

6. விவசாயம் என்பதை எந்த வடிவிலும் தொடங்கலாம் வீட்டு தோட்டம் , தோப்பு மற்றும் பண்ணை, பயிர் வளர்ப்பு, காடு வளர்ப்பு,  மதிப்பு கூட்டுதல் மற்றும் விலங்குகள் வளர்ப்பு.

No comments:

Post a Comment