Monday 25 March 2013

பண்ணை குட்டை அமைக்க போகிறார்களாம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=674247

இந்த  முட்டாக்களின் செயல்களை யாரும் கவனிப்பதே இல்லையா ?
நூறு நாள் திட்டம் என்று எல்லாரையும் யும் முடக்கி வீட்டில் அமுக்கி டாஸ்மாக் வழி சென்று விட்டது  சமூகம்.

ஏற்கனவே சாகுபடிக்கு நிலம் இல்லை இருக்கிற கோமண நிலத்திலும் பண்ணை குட்டை அமைக்க போகிறார்களாம்.

ஊர்க்குளங்கள் ஏரி கால்வாய் நீர் தேங்கும் இடங்களில் எல்லாம் சாக்கடை ஆக்கிவிட்டு இவர்களுக்கு வெட்கமாய் இல்லை ?
--
சோமங்கலம் சிவன் கோவில் சென்ற வழியில் ஒரு கிராம விவசாயியை பஸ் பயணத்தில்  சந்தித்தேன் எப்படி இருக்கிறது என்று தான் கேட்டேன் (அவ்ளவுதான் மனசு கெட்டது !)

களை கொத்து யாரும் 400 ரூபாய்க்கு குறைவாய் வருவதில்லையாம் அதும் சாப்பாடு டீ கண்டிப்பாய் வாங்கி கொடுக்க வேண்டுமாம் அதுவும் அலுவலகம் போல் ஆறு மணிக்கெல்லாம் போயி விடுகிறார்களாம். மொத்தம் 500 ரூபாய் ஆகிறது, இவர் வருமானம் அவ்வளவு இல்லையாம் புரோக்கர் போக கிடைப்பது மிகவும் கையை கடிக்கிறது என்றார்.

நேரடியாக சில இடங்களுக்கு  விற்கவேண்டியதுதானே என்றால் புன்னகைக்கிறார். வலியும் வேதனையும் பின்னால் தெரிந்தது.

வெயில் வேறு அதிகம் என்பதால் இந்த வேலைக்கு யாரும் எளிதாக வருவது  இல்லை, எல்லா ஏரி களிலும் தண்ணீர் இல்லை என்பதால் பக்கத்து நிலங்கள் பிளாட்கள் ஆக விற்கபடுகின்றன என்றார் அது மட்டும் இல்லாமல் தண்ணீர் வந்தாலும் இவர் நிலத்துக்கு வராதாம் வரும் கால்வாய் எல்லாம் லெ அவுட் க்கு போக வழிகளா மாற்ற படுகின்றன.

மல்லிகை தவிர ஏதும் கட்டுபடி ஆவதில்லை என்கிறார்.  இன்னும் கொஞ்ச நாட்களில் விற்று விட்டு போயிடுவேன் என்கிறார்.  விற்றால் நாலு மடங்கு வருமானம் வருமாம். ஊர் பஞ்சாயத்து போன்ற வகையாராக்களை கவனித்து கொண்டால் சிலவு குறையும் சி எம் டி எ என்றால் செலவு அதிகமாகிறது என்றார்.

கண்ணை வித்து சித்திரம் வாங்க முடியுமோ ? அந்த முக்கண்ணன் சிவன் தான் சொல்லணும் .

No comments:

Post a Comment